Tuesday, April 11, 2017

காரணம் கேட்டு வாடி/ Kaaranam Kettu Vaadi

பொதுவாக கடவுள்களைப் பற்றி எழுதப்படும் பாடல்கள் அவர்களின் அழகினையும் செயலையும் வர்ணிக்கும் விதத்தில் இருக்கும் இல்லை கேள்விகளை அடுக்கி முறையிடுதலாய் இருக்கும். இந்த பாடல் முறையிடுதல் ரகம். என்ன கவி பாடினாலும் என்கிற பாடல் இதற்கு சாலச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பாடலை நேரடியாய் முறையிடாது ஒரு பெண்ணிடம் சொல்லி கேட்டு வரும்படி வித்தியாசம் செய்து இருக்கிறார் சுததானந்த பாரதி. கடவுளை காதலனாய்ப் பார்க்கிறார். சுப்பிரமணிய பாரதியும் கண்ணன் என் காதலன் என்று எழுதி இருக்கிறார்

When the songs are written in the names of gods, it is written in two forms. First, glorifying the beauty and deeds of the Gods. Second - Songs asking Gods why he/she not showing mercy or asking to show mercy. This one falls in the second category

ராகம்:  பூர்வி கல்யாணி
தாளம்: ஆதி
இயற்றியவர்: சுததானந்த பாரதி



பல்லவி:

காரணம் கேட்டு வாடி
சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத
(காரணம் கேட்டு வாடி )

அனுபல்லவி:

பூரண தயவுள்ள பொன்னம்பல துரை என்
பொறுமையை சோதிக்க  மறைமுகமானதோ?

சரணம்:

கல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேனோ?
கண்ணப்பன் செய்தரு-கனவினில் தீதேனோ?
செல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ?
செய்யாத காரியம் செய்ய முன்னின்றேனோ?

பொருள்:


சகியே! சிதம்பரநாதன் ஏன் இன்னும் வரவில்லை என்கிற காரணத்தை கேட்டறிந்து வா.

முற்றிலும் கருணையால் நிறைந்த தங்க கோவிலில் வீற்றிருக்கும் சிதம்பரநாதன் என் பொறுமையை சோதிக்க மறைமுகமாய் இருக்கிறாரா?

யாரையாவது துன்புறுத்தும் வகையில் கல்லாலும் வில்லாலும் அடித்திருக்கிறேனா? கனவில் கூட தீயவற்றை நினைத்திருக்கிறேனா? போக கூடாத இடத்திற்கு யாரையேனும் பொய் வரச்சொன்னேனா? செய்ய கூடாத தீய செயல் ஏதும் செய்தேனா? பின்னர் ஏன் சிதம்பரநாதன் வரவில்லை

Raagam: Poorvi Kalyaani
Thaalam: Adhi
Composer : Sudhdhaanandha Bharathi


Pallavi:

Kaaranam Kettu Vaadi
Sakhi Kaadhalan Chidambaranaathan Innum Varaadha
(Kaaranam Kettu Vaadi)

Anupallavi:

Poorana Dhayavulla Ponnambala Durai En
Porumaiyai Sodhikka Maraimugamaanatho?

Charanam:

Kallaalum Villaalum Katti Adiththeno?
Kannappan Seitha Kanavinil Theetheno?
Sellaamanaikku Thoodhu Sendru Vaa Endreno?
Seiyyaatha Kaariyam Seiyya Mun Nindreno?

Meaning:

Ask the reason and come
O Lady! Why the Lord Chidambaranathan has not come yet?
(Ask the reason and come)

Is the person full of mercy the lord who stays in Golden temple
gone missing to test my perseverance?

Have I brutally attacked someone with stones and arrows?
Have I done any bad deeds even in dreams?
Have I sent someone to the place where he/she not destined to go?
Have I gone front asking someone to do bad deeds?
(Ask the reason why he has not come yet, then?)

No comments:

Post a Comment