Saturday, April 15, 2017

பித்தன் என்றாலும் / Piththan endraalum

இந்தப் பாடல் ஆண்டவன் பிச்சை என்ற பெண்மணியால் எழுதப்பட்டது. சிதம்பர நடராஜர்பால் எழுதப்பட்ட பாடல்கள் பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும். பித்தன் என்றாலும் மார்கழி சீஸன் நடன நிகழ்ச்சிகளில் கண்டிப்பாய் இடம்பெறும் பாடல்களில் ஒன்று. 

ராகம்: ஆபேரி 
தளம்: ஆதி (கண்ட அடதாளத்திலும் பாடப்படும்)

இயற்றியவர்: ஆண்டவன் பிச்சை 







பல்லவி:
பித்தன் என்றாலும் அவன் பேயன் என்றாலும்
சித்தம் எல்லாம் அவன்பால் செல்லுதம்மா!!

அனுபல்லவி:
தத்திமிதோம் என்றே சிறு நடனம் புரியும்,
தாண்டவனை, தில்லை சிதம்பர நாதனை

சரணம்:

அண்டங்கள் நடுங்கிட அணிந்த அரவமாலை
அரிதமும் முத்துமணி உதிர நடனமாடும்

நீலகண்டனை, மங்கை சிவகாமி மணாளனை
காமனை கண்ணால் எரித்த மகேஸ்வரனை

This song is written by a female composer by name Aandavan Pichchai. Lot of songs written for Chidambaram Natarajar is used for Bharathanatyam dance performance. This songs will be a highlight during December season of performing arts in Chennai.

Raagam: Aabheri
Thaalam: Aadhi (Also sung in Kanta Ada)
Composer: Aandavan Pichchai

Pallavi:

Piththan endraalum avan peyan endraalum
siththam ellaam avanpaal selluthammaa!!!

Anupallavi:

Thaththimithom endre siru nadanam puriyum
thaandavanai, thillai sithambara naadhanai

Saranam:

Andangal nadungida anindha aravamaalai
aridhamum muththumani udhira nadanamaadum

neelagandanai mangai sivagami manaalanai
kaamanai kannaal eriththa maheswaranai



Meaning:

Though he is a crack, a desperado
My mind goes and thinks about him

He - the person who dances to the beats thathithom
Chidambaranathar of Thillai

(Mind thnks about)
The person who wears Snake like a garland
Dances in such a way that his necklaces fall down

(Mind thinks about)
Person with blue colored neck - Husband of Sivagami
Who fired Kaaman (Manmadhan) through his eyes

Tuesday, April 11, 2017

காரணம் கேட்டு வாடி/ Kaaranam Kettu Vaadi

பொதுவாக கடவுள்களைப் பற்றி எழுதப்படும் பாடல்கள் அவர்களின் அழகினையும் செயலையும் வர்ணிக்கும் விதத்தில் இருக்கும் இல்லை கேள்விகளை அடுக்கி முறையிடுதலாய் இருக்கும். இந்த பாடல் முறையிடுதல் ரகம். என்ன கவி பாடினாலும் என்கிற பாடல் இதற்கு சாலச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பாடலை நேரடியாய் முறையிடாது ஒரு பெண்ணிடம் சொல்லி கேட்டு வரும்படி வித்தியாசம் செய்து இருக்கிறார் சுததானந்த பாரதி. கடவுளை காதலனாய்ப் பார்க்கிறார். சுப்பிரமணிய பாரதியும் கண்ணன் என் காதலன் என்று எழுதி இருக்கிறார்

When the songs are written in the names of gods, it is written in two forms. First, glorifying the beauty and deeds of the Gods. Second - Songs asking Gods why he/she not showing mercy or asking to show mercy. This one falls in the second category

ராகம்:  பூர்வி கல்யாணி
தாளம்: ஆதி
இயற்றியவர்: சுததானந்த பாரதி



பல்லவி:

காரணம் கேட்டு வாடி
சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத
(காரணம் கேட்டு வாடி )

அனுபல்லவி:

பூரண தயவுள்ள பொன்னம்பல துரை என்
பொறுமையை சோதிக்க  மறைமுகமானதோ?

சரணம்:

கல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேனோ?
கண்ணப்பன் செய்தரு-கனவினில் தீதேனோ?
செல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ?
செய்யாத காரியம் செய்ய முன்னின்றேனோ?

பொருள்:


சகியே! சிதம்பரநாதன் ஏன் இன்னும் வரவில்லை என்கிற காரணத்தை கேட்டறிந்து வா.

முற்றிலும் கருணையால் நிறைந்த தங்க கோவிலில் வீற்றிருக்கும் சிதம்பரநாதன் என் பொறுமையை சோதிக்க மறைமுகமாய் இருக்கிறாரா?

யாரையாவது துன்புறுத்தும் வகையில் கல்லாலும் வில்லாலும் அடித்திருக்கிறேனா? கனவில் கூட தீயவற்றை நினைத்திருக்கிறேனா? போக கூடாத இடத்திற்கு யாரையேனும் பொய் வரச்சொன்னேனா? செய்ய கூடாத தீய செயல் ஏதும் செய்தேனா? பின்னர் ஏன் சிதம்பரநாதன் வரவில்லை

Raagam: Poorvi Kalyaani
Thaalam: Adhi
Composer : Sudhdhaanandha Bharathi


Pallavi:

Kaaranam Kettu Vaadi
Sakhi Kaadhalan Chidambaranaathan Innum Varaadha
(Kaaranam Kettu Vaadi)

Anupallavi:

Poorana Dhayavulla Ponnambala Durai En
Porumaiyai Sodhikka Maraimugamaanatho?

Charanam:

Kallaalum Villaalum Katti Adiththeno?
Kannappan Seitha Kanavinil Theetheno?
Sellaamanaikku Thoodhu Sendru Vaa Endreno?
Seiyyaatha Kaariyam Seiyya Mun Nindreno?

Meaning:

Ask the reason and come
O Lady! Why the Lord Chidambaranathan has not come yet?
(Ask the reason and come)

Is the person full of mercy the lord who stays in Golden temple
gone missing to test my perseverance?

Have I brutally attacked someone with stones and arrows?
Have I done any bad deeds even in dreams?
Have I sent someone to the place where he/she not destined to go?
Have I gone front asking someone to do bad deeds?
(Ask the reason why he has not come yet, then?)

Sunday, April 2, 2017

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா / Sabapathiku veru deivam samanamaguma

பக்தி ஆனது கடவுளுக்கு பல வகைகளில் செலுத்தப் படுகிறது. இசை வழி என்பது முக்கியமானதாய் திகழ்கிறது. தெய்வீகத்தை அமைதியினாலும், மந்திரங்கள் சொல்வதினாலும், இசையினாலும் அடைந்துள்ளனர். நல்ல இசையை மனம் விட்டு கேட்பதும் அமைதியே. 

கர்நாடக சங்கீதத்தில் கடவுள்களின் பெயரில் பல பாடல்கள் இயற்றப் பட்டுள்ளன. சிதம்பரம் நடராஜர் பெயரில் எண்ணற்றப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. வரும் பதிவுகளில் அனைத்து பாடல்களையும் பதிவிட உள்ளோம்.

Devotion towards God has been of many forms. Music has played a prime role. Divinity is through silence, prayers in the form of Slokas, Songs - There are numerous songs which the great composers have written in the name of Gods. 

Each composer has written songs in the name of Gods. We can see the songs that have been written in the name of Rama by Sri Thyagarajar. Sri Muthuswami Dhikshithar frequently visited temples and have written songs in the name of the deities of the temple. Annamaiya wrote about Balaji. Puranththaradasa wrote predominantly in the name of Krishna. There has been innumerable songs in the name of Chidambaram Natarajar, the Sabapathi. Many writers have written in the name of Thillai Natarajar. This blog's purpose is to bring out all the compositions and to be a reference place of singers, music enthusiasts and devotees of Thillai Sabhapathi.

முதல் பாடலாய் கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய பாடல் 

ராகம்: ஆபோகி 
தாளம்: ரூபகம் 
எழுதியவர் : கோபாலகிருஷ்ண பாரதி 


பல்லவி:

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?

அனுபல்லவி:

கிருபாநிதி இவரைப் போல 
கிடைக்குமோ இந்த தாரணி தன்னில்   

சரணம்:

ஒரு தரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே 
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?
அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தார் என்றே புராணம் 
அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் தில்லை 

பொருள்:

சிதம்பரம் நடராஜருக்கு சபாபதி என்று பெயர். சபையில் முதல்வன் / சபையின் கடவுள் என்று பொருள். 

(கோபாலகிருஷ்ண பாரதி நந்தன் (திருநாளைப்போவார்) பால் அதீத அன்பு கொண்டவராய் திகழ்கிறார். அவரின் தாக்கம் இவர் பாடல்களில் மிகவும் தெரிகிறது. இவரின் நந்தன் சரித்திரமே இதற்குச் சான்று. நான் எழுதவும் இதுவே காரணமாக அமைந்தது. )

தில்லை சபாபதிக்கு வேற எந்த தெய்வமும் ஈடாகுமா? அதனை அறிந்து கொள்ள கேட்போம் கோபால கிருஷ்ணனது இப்பாடலை. இந்த உலகில் தில்லை நாதரைப்போல் கருணையின் உருவம் கிடைத்திடுமோ? தெய்வீக நிலை/ இரட்சிப்புக்கு சிவசிதம்பரம் என்று ஒரு முறை சொன்னாலே போதும். மற்ற புண்ணியங்கள் எல்லாம் செய்வதை விட இது சிறந்தது. (கடின முறைகளில் வணங்க வேண்டும் என்றில்லை, சிவசிதம்பரம் என்று ஒரு முறை உண்மையால் சொன்னால் போதும் என்று கூறுகிறார் கோபாலகிருஷ்ண பாரதி.) அரிய புலையர் - நந்தனார் (இவர் ஏது மந்திரங்கள் சொன்னார் - "சிவசிதம்பரம்" தானே அவர் சொன்ன மந்திரம்.), பாதம் - இறைவனது காலடி அடைந்தார் என்றே புராணம் சொல்ல கேட்டோம்.

Raagam: Abhogi
Thaalam: Roopakam
Composer: Gopalakrishna Bharathi

Pallavi:

Sabapathikku veru Deivam Samaanamaagumaa?
Thillai Sabaapathikku Veru Deivam Samaanamaagumaa?

Anupallavi:

Krupanithi ivaraippola kidaikkumo intha dhaaranai thannil?

Charanam:

Oru dharam sivachidambaram endru sonnal podhume
paragathikku veru punyam panna venduma?
Ariya pulaiyar moovar paadham adainthaar endre puraanam
arinthu solla kettom Gopalakrishnan paadum thillai

Meaning:

Is there a God equivalent to Sabapathi (Lord Natarajar)? 

Do we get a merciful God like him in this world?

It is enough to say "Sivachidaram" once to attain salvation than to do difficult deeds. Puranam says Nandan - the great Pulaiyar (Potter) attained his lotus feet by doing this and so the Moovars.