பக்தி ஆனது கடவுளுக்கு பல வகைகளில் செலுத்தப் படுகிறது. இசை வழி என்பது முக்கியமானதாய் திகழ்கிறது. தெய்வீகத்தை அமைதியினாலும், மந்திரங்கள் சொல்வதினாலும், இசையினாலும் அடைந்துள்ளனர். நல்ல இசையை மனம் விட்டு கேட்பதும் அமைதியே.
கர்நாடக சங்கீதத்தில் கடவுள்களின் பெயரில் பல பாடல்கள் இயற்றப் பட்டுள்ளன. சிதம்பரம் நடராஜர் பெயரில் எண்ணற்றப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. வரும் பதிவுகளில் அனைத்து பாடல்களையும் பதிவிட உள்ளோம்.
Each composer has written songs in the name of Gods. We can see the songs that have been written in the name of Rama by Sri Thyagarajar. Sri Muthuswami Dhikshithar frequently visited temples and have written songs in the name of the deities of the temple. Annamaiya wrote about Balaji. Puranththaradasa wrote predominantly in the name of Krishna. There has been innumerable songs in the name of Chidambaram Natarajar, the Sabapathi. Many writers have written in the name of Thillai Natarajar. This blog's purpose is to bring out all the compositions and to be a reference place of singers, music enthusiasts and devotees of Thillai Sabhapathi.
முதல் பாடலாய் கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய பாடல்
ராகம்: ஆபோகி
தாளம்: ரூபகம்
எழுதியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
.
பல்லவி:
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?
அனுபல்லவி:
கிருபாநிதி இவரைப் போல
கிடைக்குமோ இந்த தாரணி தன்னில்
சரணம்:
ஒரு தரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?
அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தார் என்றே புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் தில்லை
பொருள்:
சிதம்பரம் நடராஜருக்கு சபாபதி என்று பெயர். சபையில் முதல்வன் / சபையின் கடவுள் என்று பொருள்.
(கோபாலகிருஷ்ண பாரதி நந்தன் (திருநாளைப்போவார்) பால் அதீத அன்பு கொண்டவராய் திகழ்கிறார். அவரின் தாக்கம் இவர் பாடல்களில் மிகவும் தெரிகிறது. இவரின் நந்தன் சரித்திரமே இதற்குச் சான்று. நான் எழுதவும் இதுவே காரணமாக அமைந்தது. )
தில்லை சபாபதிக்கு வேற எந்த தெய்வமும் ஈடாகுமா? அதனை அறிந்து கொள்ள கேட்போம் கோபால கிருஷ்ணனது இப்பாடலை. இந்த உலகில் தில்லை நாதரைப்போல் கருணையின் உருவம் கிடைத்திடுமோ? தெய்வீக நிலை/ இரட்சிப்புக்கு சிவசிதம்பரம் என்று ஒரு முறை சொன்னாலே போதும். மற்ற புண்ணியங்கள் எல்லாம் செய்வதை விட இது சிறந்தது. (கடின முறைகளில் வணங்க வேண்டும் என்றில்லை, சிவசிதம்பரம் என்று ஒரு முறை உண்மையால் சொன்னால் போதும் என்று கூறுகிறார் கோபாலகிருஷ்ண பாரதி.) அரிய புலையர் - நந்தனார் (இவர் ஏது மந்திரங்கள் சொன்னார் - "சிவசிதம்பரம்" தானே அவர் சொன்ன மந்திரம்.), பாதம் - இறைவனது காலடி அடைந்தார் என்றே புராணம் சொல்ல கேட்டோம்.
Raagam: Abhogi
Thaalam: Roopakam
Composer: Gopalakrishna Bharathi
Pallavi:
Sabapathikku veru Deivam Samaanamaagumaa?
Thillai Sabaapathikku Veru Deivam Samaanamaagumaa?
Anupallavi:
Krupanithi ivaraippola kidaikkumo intha dhaaranai thannil?
Charanam:
Oru dharam sivachidambaram endru sonnal podhume
paragathikku veru punyam panna venduma?
Ariya pulaiyar moovar paadham adainthaar endre puraanam
arinthu solla kettom Gopalakrishnan paadum thillai
Meaning:
Is there a God equivalent to Sabapathi (Lord Natarajar)?
Do we get a merciful God like him in this world?
It is enough to say "Sivachidaram" once to attain salvation than to do difficult deeds. Puranam says Nandan - the great Pulaiyar (Potter) attained his lotus feet by doing this and so the Moovars.
wonderful song
ReplyDeleteஅரியர் புலையர் மூவர் என்று குறிப்படுவது நந்தனார், பெற்றான் சாம்பான், தில்லை வெட்டி என்கிறார்கள். இவர்களில் தில்லை வெட்டி என்பவரின் சரித்திரம் என்னவென்று மட்டும் அறியமுடியவில்லை. அறிந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும். நன்றி
ReplyDelete